Saturday, August 20, 2011

பிரிவின் துயரம்!!



மனதின் துயரம் என்பது இது தான் போலும்.,


நீ பிரிந்து செல்கிறாய் என்பதை உணர்கிறேன்.,


கையில் சூடு பட்ட நிலையிலும்

உணர்ச்சி இல்லாமல் தவிக்கிறேன்.,


உன்னை நினைக்காமல் இருக்க என்

மூளைக்கு அதிக வேலை தருகிறேன்.,


இருந்தும் உண்ணும் போது கூட

உன் நினைவால் உயிர் உருக்குலைந்து போகிறது.,




உன் பிரிவை தாங்கும் அளவிற்கு

என் மனதை தயார் படுத்தும்

முயற்சியில் நான்!!!



Monday, July 25, 2011

தோழி


உன்னை பிரியவில்லை,

என்னுடைய சந்தோசத்தை வெளிபடுத்தினாய்.,

என்னுடைய சோகத்தை பகிர்ந்தாய்.

சிலரை பிரியும் நேரத்தில் மட்டுமே

உன்னை அணுகினேன்.,

அப்போது கூட உன்மடியில் இடம் கொடுத்தாய்.,

வா இருவரும் சரித்திரம் படைப்போம்.,

தோழிகளாய் வாழ் நாள் முழுதும்

நீடிக்கும் நட்பாய் இருவரது நட்பு.,

வருந்துகிறேன்.,


உன்னை கண்டுகொள்ளாத நேரத்திற்காக

சொல்கிறேன்!


புரியலையா! விழிக்காதே தமிழே!!! உன்னை தான்

என்னுடைய தோழியாய் கண்டிப்பாக

உயிர் பிரியும் வரை இருப்பாய் அல்லவா.,!

Tuesday, April 19, 2011

நட்சத்திர கூட்டம்

எங்கே சென்றீரோ கூட்டமாக

உம்முள் தொலைந்த நிலவோ தேடிக்கொண்டு

இருக்கிறது அதன் உறவுகளை.


நிலவுக்கு தெரிந்தது உண்மை இங்கே

  யாருக்கும் தெரியவில்லை .,


உறவுகளை தொலைத்தவர்கள் இங்கே  அமைதி

காணலாம் என்பதை.,


கண்ணாமூச்சி ஆடிகொண்டிருக்கும் உம்மை காணும்

  போது நெஞ்செல்லாம் மகிழ்ச்சி.


உம்மை எண்ண முயன்று தோற்றுப்போன

  வடு இன்னும் மாறவில்லை.,


அனைவரையும் குழப்பும் உம் எண்ணிக்கை!!!

Sunday, April 3, 2011

அம்மா


சொல்ல நினைத்ததை முடியாமல் திணற.,

சரியாக புரிந்து என்னை பார்த்து கொண்டாய்.

கல்லூரிக்கு கிளம்பும் போது கூட.,

வழி நெடுக எனக்கு அறிவுரை

கூறிக்கொண்டே வந்தாய்.

மனமில்லாமல் பிரிந்து வந்தேன்!

மனம் நிறையே  நீயே இருக்கிறாய் கல்லூரியிலும்!!! 

Tuesday, February 1, 2011

தவறான எண்ணங்கள்!

தெரிந்து செய்யவில்லை!

காயப்படுகிறது மனம்.,

புரிகிறதா அல்லது புரியவில்லையா?

ஒருவரின் மனநிலையில்  இருந்து யோசிக்கலாம்.
ஆனால் ஆராய ஞானி  அல்ல!
.
மற்றவரிடம் பேசாமல்  இருக்க

தியான மனமில்லை .,

காற்றை கூட  நம்பமுடியவில்லை.,

காயங்களில் துடிக்கிறது கண்கள்.,

தன்னை நம்புவோர் யாரையும் நம்பவேண்டாம்.


நினைப்பவர்கள்  நினைக்கட்டும்!

இருக்கிற வரை நல்லவராக இருந்து விட்டு போய்விடலாம்..!

Monday, January 31, 2011

ஏதோ எண்ணங்கள்!


காக்கை கூட அழகாக தெரிகிறதே !


உச்சி  மராத்தில் குட்டி கிளி என்னவென்று சொல்வது !


எதையும் விநோதமாக பார்கிறேன் !


வானை கிழிக்கும் சூரியவெளிச்சம் !


பச்சை இலையினுல் வெள்ளை பூக்கள் !


வேலை செய்வோரின் கிசுகிசுப்பு !


தோழிகளின் ஆரவாரம் !


இயல்பானது தான், ஏன்


விசித்திரமகிறது என் பார்வை !


இதழோரத்தில் ஒரு புன்னகை.,


வாழ்கையை ரசிக்கிரோனோ!


பிடித்திருக்கிறது இவ்வாழ்க்கை ….!


Monday, January 10, 2011

நீர் வீழ்ச்சி!

என்ன அழகாக வெளி வருகிறது மலைகளில் இருந்து

அனைத்தும் ஒன்றாக சேர்ந்து விட்டன..,

ஆனந்த களிப்பில் இருக்கும் என்று பார்த்தால்.,

என்ன சோகமோ தெரியவில்லை.,

அனைத்தும் தற்கொலை செய்துகொண்டன 

நீர்வீழ்ச்சியாக..!